கொல்கத்தாவில் பாரிய தீ விபத்து: 10 வீடுகள் நாசமாகின
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உல்டடாங்கா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை 07.30 மணியளவில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் குறைந்தது 10 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக இந்திய தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் கிடைத்ததும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், இதற்காக ஆறு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்திற்கான காரணம் மற்றும் தீயால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை.