சமூக பாதுகாப்பு சபையின் வளர்ச்சிக்கு அமைச்சர் டக்ளஸ் காரணம் – மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் புகழாரம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகபாதுகாப்பு சபையின் வளர்ச்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே காரணம் என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் புகழாரம் சூட்டினார்.
இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் யாழ் மாவட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் 2006 ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமூக சேவைகள் அமைச்சராக இருந்தபோது முதன் முதலாக யாழ் மாவட்டத்தில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் செயற்பாடுகளை ஆரம்பித்தார்.
அவரின் உத்வேகமான செயற்பாடும் அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் குறித்த செயற்திட்டத்தை எமது மாவட்டத்தில் திறம்பட செயற்படுத்த உதவியது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 22 பேர் பயன்பெற்று வரும் நிலையில் கடந்த 10 வருடங்களாக சமூக பாதுகாப்பு சபையின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முதலிடத்தை பெற்றுவருகிறது.
குறித்த திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பல நன்மைகள் கிடைத்து வரும் நிலையில் மாணவர்கள் குறித்த திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பதினைந்து பிரதேச செயலகங்களிலும் சொயற்படுத்தப்பட்டு வரும் நிலையில் குறித்த திட்டத்தை தொடர்ந்தும் வெற்றிகரமாக செயற்படுத்துவேம் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) மருதலிங்கம் பிரதீபன் மாவட்ட செயலக திட்டப்பணிப்பாளர் சுரேந்திரன் மற்றும் பிரதேச செயலாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.