Jet tamil
இலங்கை

நெடுந்தீவில் கூட்டுப்படுகொலை – சந்தேக நபர் கைது:  தொடரும் பரபரப்பு…!

நெடுந்தீவு பகுதியில் நேற்று (22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மற்றுமொரு வயோதிபப் பெண் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தையடுத்து நெடுந்தீவில் பரபரப்பு நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாரின் விசாரணையின் பின்னர் நேற்று  மாலை புங்குடுதீவு பெருங்காட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

குறித்த நபர் அண்மையில் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.

100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82), பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76), கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83), மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலங்களாக இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெடுந்தீவு மாவளி இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டியொருவர் நெடுந்தீவுக்கு செல்வோருக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல், உணவு வழங்குதல் போன்றவற்றை தொழிலாக செய்து வந்துள்ளார்.

இவரது கணவர் 1986ஆம் ஆண்டு குமுதினி படுகொலையின்போது படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த மூதாட்டி தனது வாழ்வாதாரத்தை தானே கொண்டு நடாத்தி வந்துள்ளார்.

நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐவர் நேற்று முன்தினம் (21) நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்து நேற்று  சனிக்கிழமை காலை எவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அயலவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.

ஒருவர் வீட்டின் வெளியேயும் ஏனையவர்கள் வீட்டின் உள்ளே படுக்கை மற்றும் ஏனைய பாகங்களிலும் கொடூரமான வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டனர்.

அதில் ஒருவர் படுகாயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

Related posts

சுமந்திரன் ஜனாதிபதி அநுரகுமாரிடம் விடுத்த பகிரங்க கோரிக்கை

jettamil

சுன்னாகம் பகுதியில் போலீசாரின் கொடூர தாக்குதல்

kajee

ஜனாதிபதி துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் – பொன்.சுதன் கோரிக்கை!

kajee

காகம் சங்கைப் பார்த்து கறுப்பு என்றது – கடுமையாக சாடிய சுரேந்திரன்!

kajee

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பிச் சென்ற 9 இலங்கை தமிழர்கள்

kajee

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன்

kajee

Leave a Comment