Welcome to Jettamil

இன்று முதல் வாகன பதிவு இலக்கத்தின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் பெற்றோல், டீசல் விநியோகம்

petrol

Share

இன்று முதல் (21.07.2022) பெற்றோல், டீசல் விநியோகம் ஆகியன தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ் மாவட்டத்தின் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மோட்டார் சைக்கிள் – ரூபா 1500/=
முச்சக்கர வண்டி – ரூபா 2000/=
கார்/வான் மற்றும் ஏனையவை – ரூபா 7000/=

வாகன பதிவு இலக்க இறுதி இலக்கத்தின் அடிப்படையில் கீழ்வருமாறு விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் , சனி – 0,1, 2
வியாழன்,ஞாயிறு – 3, 4, 5
திங்கள் புதன் வெள்ளி – 6,7,8,9

QR code செயன்முறை முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை எரிபொருள் விநியோக அட்டையில் பதிவுகள் மேற்கொள்ளப்படும். எரிபொருள் விநியோக அட்டையில் குறிப்பிடப்பட்ட எரிபொருள் நிலையத்திற்கு மேலதிகமாக ஏதேனும் ஒரு எரிபொருள் நிலையத்தில் அவ் அட்டையைப் பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் தனியார் பேருந்துகளுக்கும் , பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபை சாலைகள் ஊடாக தொடர்ந்து வழமைபோன்று டீசல் விநியோகம் மேற்கொள்ளப்படும் .

எரிபொருள் விநியோக திகதிகள் பற்றிய முழு விபரங்கள் ஊடகங்களில் வெளியிடப்படும். ஆகவே பொதுமக்கள் வரிசையில் காத்திராது ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளும்படியும்.

ஆகவே இதற்கு ஒத்துழைப்பு வழங்கி எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை