Welcome to Jettamil

யாழ். மண்ணில் ஜனாதிபதியுடன் பொங்கல் விழா! வேலணையில் கலைகட்டிய தைத்திருநாள்

Share

யாழ். மண்ணில் ஜனாதிபதியுடன் பொங்கல் விழா! வேலணையில் கலைகட்டிய தைத்திருநாள்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ மாகாண பொங்கல் விழா, இன்று (15.01.2026) யாழ்ப்பாணம் வேலணையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் மிக விமர்சையாக நடைபெற்றது.

வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, தமிழர்களின் கலாசார முறைப்படி பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மங்கல வாத்தியங்கள் முழங்க, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதிய பானையில் அரிசியிட்டுப் பொங்கல் நிகழ்வை மங்கலமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்குப் பிறகு, வடக்கு மக்களுடன் இணைந்து ஜனாதிபதி இம்முறை தைப்பொங்கலைக் கொண்டாடியமை அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை