மன்னாரில் காற்றாலை மின் திட்டம்: ஜனாதிபதி அநுரகுமார அடிக்கல் நாட்டி வைத்தார்!
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ‘ஹேவிண்ட் வன்’ (HyWind One) காற்றாலை மின் திட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (15.01.2026) அடிக்கல் நாட்டி வைத்தார்.
மன்னார் கொன்னயன் குடியிருப்பில் இந்த அடிக்கல் நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஹேலிஸ் பென்டன் (Hayleys Fentons) நிறுவனமும், இலங்கை மின்சார சபையும் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இந்தத் திட்டப்பணிகள் அடுத்த 18 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வலுசக்தி பிரதி அமைச்சர் இலியாஸ் முஹம்மது அஹ்ரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மன்னார் பகுதியில் நிலவும் காற்றாலை வளத்தைப் பயன்படுத்தி, சுற்றாடலுக்குப் பாதிப்பில்லாத தூய எரிசக்தியை உற்பத்தி செய்வதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.





