Welcome to Jettamil

இத்தாலியப் பிரதமர் மீது ஜனாதிபதி ட்ரம்ப் கடும் தாக்குதல் – அமெரிக்கா – இத்தாலி உறவில் திடீர் விரிசல்!

Share

இத்தாலியப் பிரதமர் மீது ஜனாதிபதி ட்ரம்ப் கடும் தாக்குதல் – அமெரிக்கா – இத்தாலி உறவில் திடீர் விரிசல்!

ஈரான் மீதான போரில் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்த இத்தாலி மறுத்துள்ளதையடுத்து, பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்குத் தைரியம் இல்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.

இத்தாலியப் பத்திரிகையான ‘Corriere della Sera’வுக்கு அளித்த பேட்டியில், “மெலோனிக்கு தைரியம் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் நான் தப்பு கணக்கு போட்டுவிட்டேன்; அவர் என்னை அதிர்ச்சியடையச் செய்துவிட்டார்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்ததே ட்ரம்ப்பின் இந்த ஆத்திரத்திற்குக் காரணமாகும்.

முன்னதாக, போப் ஆண்டவர் 14-ஆம் லியோ (Pope Leo XIV) குறித்து ட்ரம்ப் வெளியிட்ட விமர்சனங்களை மெலோனி “ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ட்ரம்ப், “மெலோனி தான் ஏற்றுக்கொள்ள முடியாதவர்; ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால் அது இரண்டு நிமிடங்களில் இத்தாலியை அழித்துவிடும் என்பது அவருக்குத் தெரியவில்லை” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஈரானிய எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற மெலோனி தடையாக இருப்பதாகவும் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை