Welcome to Jettamil

240 ஈரானிய கடற்படையினர் தாயகம் திரும்பினர்! – துருக்கி விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

Share

240 ஈரானிய கடற்படையினர் தாயகம் திரும்பினர்! – துருக்கி விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

வெலிசர மற்றும் கொக்கல தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினர், துருக்கிக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து ஈரான் நோக்கிப் புறப்பட்டனர்.

இவர்களில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 வீரர்களும், ‘ஐரிஸ் புஷர்’ (IRIS Bushehr) கப்பலைச் சேர்ந்த 208 வீரர்களும் அடங்குவர்.

சர்வதேச நெறிமுறைகளுக்கு அமைவாக இந்த மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் கருத்துத் தெரிவித்துள்ள பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இடம்பெற்ற மோதலில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இலங்கை அரசு வழங்கியதாகத் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை