Welcome to Jettamil

லங்கா பிரீமியர் லீக் 2026 தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு ஆரம்பம்

Share

லங்கா பிரீமியர் லீக் 2026 தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் 2026 போட்டித் தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவுகள் நாளை மறுநாள், அதாவது மே 8-ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

விருப்பமுள்ள வெளிநாட்டு வீரர்கள் எதிர்வரும் மே 18-ஆம் தேதி வரை இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.srilankacricket.lk மூலம் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

உலகின் முன்னணி டி-20 நட்சத்திரங்கள் பலரும் இந்த ஆண்டுப் போட்டியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தொடரை நாட்டின் நான்கு முக்கிய சர்வதேச மைதானங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு எஸ்.எஸ்.சி, ஆர். பிரேமதாச, கண்டி பல்லேகெலே மற்றும் தம்புள்ள சர்வதேச மைதானங்களில் ஆட்டங்கள் அரங்கேறவுள்ளன.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடர் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை