Friday, Jan 17, 2025

சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தமிழரசு கட்சியை சார்ந்தவர் கல்வீச்சு!

By kajee

சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தமிழரசு கட்சியை சார்ந்தவர் கல்வீச்சு!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளரான பெண் ஒருவரினிலாயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா ரவிராஜ் தெரிவிக்கின்றார். குறித்த பெண் தனது (சசிகலாவின்) வீட்டின் உள்ளே சென்று வீட்டில் உள்ள அலுமாரியின் கண்ணாடிகளை அடித்து உடைத்ததாக சசிகலா ரவிராஜ் தெரிவிக்கின்றார்.

குறித்த பெண்ணினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் வேட்பாளர் சசிகலா ராவிராஜ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

IMG 20241026 WA0147
Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு