புலமைப்பரிசில் பரீட்சை : கல்வி அமைச்சின் அறிவிப்பு
இலங்கையில் நடைபெற்ற கடந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலை அனுமதி தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 6க்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான மேன்முறையீடுகள் இன்று (13) முதல் ஏற்றுக் கொள்ளப்படும்.
2024 பெப்ரவரி 13 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இணையவழி மூலம் மேல்முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக அனுப்பப்படும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கு மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக முறையீடுகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.