நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த முதல்வர் திரு இராம்குமார் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை – யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில் அவர் நேற்று (24) மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். குறித்த வைத்தியசாலைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் வருகை தந்து, வைத்தியசாலைக்கு நிதி உதவி வழங்கியதுடன் அங்கு ஒரு மாமரத்தினையும் நாட்டிச் சென்றுள்ளார்.
அந்தவகையில் திரு. இராம்குமார் அவர்கள் அந்த மாமரத்தினை பார்வையிட்டதுடன் நினைவுக்கல்வெட்டினையும் திறந்து வைத்தார். அதன் பின்னர் மக்களுடன் கலந்துரையாடினார்.