அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64 ஆக உயர்த்தும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் யோசனைக்கு பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இது பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கிடைத்த பாரிய வெற்றி என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் தொழிலாளர் அமைச்சர், உத்தேச செயல்முறை செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பிரான்ஸ் முழுவதும் பரவி வரும் போராட்டங்கள் காரணமாக, பல முக்கிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வன்முறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த பிரேரணைக்கு எதிராக மே 1ஆம் திகதி தொழிலாளர் தினத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு பிரான்சின் பிரதான தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.