Welcome to Jettamil

தேங்க்யூ சூப்பர் ஸ்டார்! – ரஜினியின் வாழ்த்துக்கு முதல்வர் விஜய் பதில்!

Share

தேங்க்யூ சூப்பர் ஸ்டார்! – ரஜினியின் வாழ்த்துக்கு முதல்வர் விஜய் பதில்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

“தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் வாழ்த்துகள்” என ரஜினி பதிவிட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்துள்ள முதல்வர் விஜய், “சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ரஜினி, திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தபோது, திமுக-அதிமுக கூட்டணி குறித்துப் பேசியதாக எழுந்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

இதன் பின்னணியில் அதிமுக இரண்டாக உடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ரஜினி பற்றி இணையத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த இக்கட்டான சூழலிலும், ரஜினிக்கு முதல்வர் விஜய் அளித்துள்ள இந்த நாகரீகமான பதில் அரசியல் முதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை