இன்றைய வானிலை அறிக்கை – 11.02.2024
நாட்டில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது கி.மீ. (30-40) பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை ஏற்படக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.