Welcome to Jettamil

திரிஷாவின் அழுகையும் ; ரம்யாகிருஷ்ணனின் கிண்டலும்! பலரையும் ஏமாற்றிய திரிஷா

Share

திரிஷாவின் அழுகையும் ; ரம்யாகிருஷ்ணனின் கிண்டலும்! பலரையும் ஏமாற்றிய திரிஷா

‘ஜோடி’ படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமாகி, இன்று தென்னிந்தியத் திரையுலகின் ‘குயின்’ ஆக வலம் வருபவர் நடிகை திரிஷா.

அதேபோல், ‘நீலாம்பரி’யாக மிரட்டிய ரம்யாகிருஷ்ணனும் திரிஷாவும் நீண்டகால நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், திரிஷா குறித்து ரம்யாகிருஷ்ணன் பேசிய பழைய நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது.

அதில், “திரிஷா பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார்; அதேபோல் எந்த நேரத்திலும் அவரால் கண்ணீர் வரவழைக்க முடியும்” என ரம்யாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“திரிஷா தனது அழுகையின் மூலம் பலரையும் ஏமாற்றியுள்ளார்” என ரம்யாகிருஷ்ணன் கலாய்க்க, அதற்குத் திரிஷா அளித்த பதில் இன்னும் சுவாரசியமானது.

“நான் உண்மையாகவே கவலைப்பட்டு அழுதாலும், ரம்யா மட்டும் தான் சிரிப்பார். நான் ஏதோ நாடகம் ஆடுவதாக நினைத்துக் கொண்டு என்னை எப்போதும் கிண்டல் செய்வார்” எனத் திரிஷா அந்த வீடியோவில் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

சமீபகாலமாகத் திரிஷா குறித்துப் பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், தோழிகள் இருவரின் இந்த அன்பான ‘த்ரோபேக்’ வீடியோ ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை