Welcome to Jettamil

ஈரானைத் அடிக்க தயாராகும் ‘USS ஆபிரகாம் லிங்கன்’! அமெரிக்கா வெளியிட்ட வீடியோ!

Share

ஈரானைத் அடிக்க தயாராகும் ‘USS ஆபிரகாம் லிங்கன்’! அமெரிக்கா வெளியிட்ட வீடியோ!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகமான சென்ட்காம் (CENTCOM) ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ போன்ற பிரம்மாண்ட போர்க்கப்பல்களில் இருந்து சீறிப்பாயும் போர் விமானங்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்களைச் சீரமைக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

“நாங்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தித் தயாராக இருக்கிறோம்” என்ற நேரடி எச்சரிக்கையை இதன் மூலம் அமெரிக்கா ஈரானுக்கு விடுத்துள்ளது.

“உலகில் எந்த ஒரு இராணுவமும் செய்யாத வகையில், இந்த போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி நாங்கள் எங்களது நுட்பங்களை நவீனப்படுத்தி வருகிறோம்” என அமெரிக்க இராணுவ அதிகாரிகள் முழங்கியுள்ளனர்.

இதற்கிடையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், “கடல்வழி முற்றுகையை நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை” என ஈரான் பிடிவாதம் காட்டி வருகிறது.

நடுக்கடலில் அமெரிக்க மரைன் வீரர்கள் ஈரானியத் துறைமுகங்களைச் சுற்றி வளைத்துத் தங்களின் முற்றுகையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை