இந்திய மீனவர்களை பிடிக்க முடியாத இலங்கை அரசு செங்கடலுக்கு கடற்படையை அனுப்புகிறது – கடல் தொழில் அமைப்பு
இந்திய மீனவர்களை பிடிக்க முடியாத இலங்கை அரசு செங்கடலுக்கு கடற்படையை அனுப்புகின்றது என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடல் தொழில் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே சம்மேளன செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு தமிழ் கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா இதுவரை தீர்வினை பெற்றுத்தராதது கவலையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.