அமெரிக்கா இலங்கைக்கு எழு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் டொலர்களுக்கு மேல் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் கர்லயா, சுகாதார அமைச்சுக்கு வைட்டமின்கள், நாட்பட்ட நோய்களுக்கான மருந்துகள், வடிகுழாய்கள், சிரிஞ்ச்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளும் அவசரமாகத் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, அவுஸ்திரேலியா இலங்கைக்கு 600 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் உலக உணவுத் திட்டம் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிசியின் பெறுமதி சுமார் 15 மில்லியன் டொலர்களாகும், மேலும் இது எதிர்காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
இலங்கையுடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஆதரவை வழங்கவும் நம்புவதாக அவுஸ்திரேலியா மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உலகளாவிய உணவு பாதுகாப்பு நிதியத்திற்கு 2.9 பில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.