சுழிபுரத்தில் வாள் வைத்து அட்டகாசம் செய்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாள்வைத்து அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் குறித்து இளைஞன் இவ்வாறு வாள் மூலம் மிரட்டுதல் விடுத்த நிலையில் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.
குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸிடம் ஒப்படைத்த நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.