விஸ்வலிங்கம் மணிவண்ணன் வாக்களிப்பு
தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் கொக்குவில் மேற்கு சி.சி.த.க பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளிப்பு நிலையத்தில் தனது வாக்கினை செலுத்தினர்.
வாக்களித்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மக்கள் மிகவும் ஆர்வமாக வாக்களிப்பில் கலந்து கொண்டு உளளார்கள். இந்த தேர்தலில் இளையவர்களை அல்லது புதியவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் உள்ளார்கள்.
மக்கள் தமிழ் மக்கள் கூட்டணிக்கு அதிக வாக்குகளை தந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என நான் நம்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.