எங்களுக்கு இதுல கொஞ்சமும் விருப்பமில்லை! – ட்ரம்பின் முடிவால் கொதிக்கும் இஸ்ரேல்!
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே எட்டப்பட்டுள்ள 14 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம், இஸ்ரேல் தரப்பில் உச்சக்கட்டக் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்குள் இருக்கும் மிக முக்கியமான இராணுவ இலக்குகளைத் தாக்கிச் சின்னாபின்னமாக்க இஸ்ரேல் திட்டத்தைப் போட்டிருந்தது. ஆனால், ட்ரம்பின் இந்தத் திடீர் போர்நிறுத்த அறிவிப்பால், இஸ்ரேலின் ஒட்டுமொத்த இராணுவத் திட்டங்களும் இப்போது தவிடுபொடியாகிப் போயுள்ளன.
“ட்ரம்ப் தான் எமது தலைவர், அவர் எடுக்கும் முடிவை நாம் மதிப்போம்” என நெதன்யாகு முன்னதாகவே அறிவித்திருந்தார்.
இதனால், தற்போது அமெரிக்காவின் இந்த முடிவில் இஸ்ரேலுக்குச் சிறிதளவும் விருப்பம் இல்லையென்றாலும், வேறு வழியின்றி மிகவும் தயக்கத்துடனே (Reluctantly) இந்தப் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் கட்டுப்பட்டு நடப்பதாகப் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“ஈரானுக்குக் கால அவகாசம் கொடுப்பது அவர்களுக்கு மீண்டெழ வாய்ப்பளிக்கும்” என இஸ்ரேலிய உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ட்ரம்பின் இந்த இராஜதந்திர நகர்வு இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து போர்நிறுத்தத்தை ஏற்கும் நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது.





