வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலைக்கு துபாயிலிருந்து வந்த 15 இலட்சம் ரூபா !
மாத்தறை, வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர படுகொலை சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கிதாரியிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாதாள உலகக் குழு உறுப்பினர்களான மிதிகம ருவன் மற்றும் சூட்டி என்பவர்களின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலமாகவே லசந்த விக்ரமசேகரவை கொலை செய்வதற்கான ஒப்பந்தம் (Contract) வழங்கப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து வழங்கப்பட்ட குறித்த கொலை ஒப்பந்தத்திற்காக, துப்பாக்கிதாரியான கொலையாளிக்கு ரூபா 15 இலட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைப் பணத் தொகையானது, கொலையை மேற்கொள்வதற்கு முன்னரே கொலையாளிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 26, 2025) மாலை மகரகம, நாவின்ன பகுதியில் வைத்து வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கொலை தொடர்பான அனைத்து இரகசியத் தகவல்களும் புலனாய்வுக் குழுக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





