Welcome to Jettamil

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகன் கைது!

Share

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகன் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) சற்று முன்னர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக இன்று நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே, முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்தச் சம்பவம் தொடர்பாக சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை