Welcome to Jettamil

சுற்றுலாப் பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 40 நாடுகளுக்கு விசா இலவசம்

Share

சுற்றுலாப் பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 40 நாடுகளுக்கு விசா இலவசம்

இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 6 மாத காலத்திற்கு இலவச விசா வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அதிரடியாக ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று (31.03.2026) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விசா கட்டணமில்லாச் சலுகையைப் பெறும் நாடுகளில் இந்தியா, சீனா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 40 நாடுகள் உள்ளடங்கியுள்ளன.

குடியேற்றம் மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ், இதற்கான புதிய விதிமுறைகளைச் சட்ட வரைவாளர் தயாரித்துள்ளதாகவும், அவை விரைவில் நாடாளுமன்ற ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை உலகின் முன்னணி சுற்றுலாத் தலமாக வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் அதிகளவிலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடிவதுடன், நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயும் கணிசமாக உயரும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா
ஆஸ்திரியா
பஹ்ரைன்
பெலாரஸ்
பெல்ஜியம்
கனடா
சீனா
செக்குடியரசு
டென்மார்க்
பின்லாந்து
பிரான்ஸ்
ஜெர்மனி
இந்தியா
இந்தோனேசியா
ஈரான்
இஸ்ரேல்
இத்தாலி
ஜப்பான்
கஜகஸ்தான்
குவைத்
மலேசியா
நேபாளம்
நெதர்லாந்து
நியூசிலாந்து
நோர்வே
ஓமான்
பாகிஸ்தான்
போலந்து
கத்தார்
ரஷ்யா
சவுதி அரேபியா
தென் கொரியா
ஸ்பெயின்
ஸ்வீடன்
சுவிட்சர்லாந்து
தாய்லாந்து
துருக்கி
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய இராச்சியம்
அமெரிக்கா

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை