Welcome to Jettamil

அமேசானைத் தொடர்ந்து ஆரக்கிள்! துபாயில் உள்ள அமெரிக்கத் தரவு மையம் சிதைப்பு – ஈரானின் அதிரடித் தாக்குதல்

Share

அமேசானைத் தொடர்ந்து ஆரக்கிள்! துபாயில் உள்ள அமெரிக்கத் தரவு மையம் சிதைப்பு – ஈரானின் அதிரடித் தாக்குதல்

பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையம் தாக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, துபாயில் அமைந்துள்ள அமெரிக்காவின் புகழ்பெற்ற Oracle கிளவுட் தரவு மையத்தின் மீதும் ஈரானியப் புரட்சிகரக் காவற்படையின் (IRGC) கடற்படைப் பிரிவு அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலால் துபாயில் உள்ள குறித்த மையம் பாரிய தீ விபத்துக்குள்ளாகிச் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் பொருளாதாரத் தூண்களை வளைகுடா மண்ணிலிருந்து அடியோடு சாய்க்கும் ஈரானின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

வெறும் இராணுவ இலக்குகளை மட்டும் குறிவைக்காமல், அமெரிக்காவின் வர்த்தக ஜாம்பவான்களை ஈரான் நேரடியாகத் தாக்கத் தொடங்கியுள்ளமை ஜனாதிபதி ட்ரம்பிற்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் பென்டகன் மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன. மத்திய கிழக்கில் இயங்கி வரும் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் பாதுகாப்பு இப்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆரக்கிள் தரவு மையம் சிதைக்கப்பட்டதால், அதனைப் பயன்படுத்தி வரும் பல சர்வதேச நிறுவனங்களின் தரவுகள் மற்றும் ஆன்லைன் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை