இலங்கை வரலாற்றில் புதிய சாதனை! 62 கோடி ரூபா பரிசுத்தொகை வெற்றியாளரிடம் கையளிப்பு
இலங்கை லொத்தர் வரலாற்றிலேயே இதுவரை வழங்கப்படாத அதிகூடிய பரிசுத்தொகையாக, 629,855,919.60 ரூபாய் இன்று (10.04.2026) உத்தியோகபூர்வமாக வெற்றியாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் “கப்ருகா” (Kapruka) விசேட குலுக்கல் மூலம் இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
கொழும்பில் உள்ள அபிவிருத்தி லொத்தர் சபையின் கலையரங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, வெற்றியாளருக்கு இந்த பாரிய தொகைக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.




