Welcome to Jettamil

தங்கையின் மோதிரத்தைத் திருடி காதலிக்கு ஐபோன் பரிசு! யாழில் சிக்கிய 16 வயது மாணவன்

Share

தங்கையின் மோதிரத்தைத் திருடி காதலிக்கு ஐபோன் பரிசு! யாழில் சிக்கிய 16 வயது மாணவன்

யாழ். நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன், தனது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவின் போது உறவினர் ஒருவரால் பரிசாக வழங்கப்பட்ட தங்க மோதிரத்தைக் களவாடியுள்ளார்.

விழா நடைபெற்ற அன்றைய தினமே மோதிரம் மாயமானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்த நிலையில், அந்த மாணவன் தனது காதலிக்கு விலையுயர்ந்த ஐபோன் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

இருவரும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்று வரும் நிலையில், தங்கைக்காகச் செய்யப்பட்ட நகையையே காதலிக்கு ஐபோன் வாங்க அந்த மாணவன் பயன்படுத்தியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாணவியின் வீட்டில் ஐபோன் குறித்து எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, மாணவியின் உறவினர்கள் மாணவனின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த ஐபோனில் மாணவனின் புகைப்படங்கள் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, விளையாட்டு மைதானத்தில் இருந்த மாணவனை அழைத்து வந்து பெற்றோர் நடத்திய விசாரணையில், தங்கையின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த உண்மையை அவன் ஒப்புக்கொண்டுள்ளான்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை