சட்டப்பூர்வ ஆவணங்களைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரம் – அமெரிக்காவுடனான உடன்படிக்கைகள் உறுதி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் அமெரிக்க – ஈரான் உயர்மட்டப் பேச்சுவார்த்தையில், எட்டப்பட்ட உடன்படிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகளில் ஈரானியத் தூதுக்குழுவினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவுடனான முதற்கட்ட நேரடிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், பேசப்பட்ட விடயங்களை உத்தியோகபூர்வமான சட்ட வரைபுகளாக மாற்றும் மிக முக்கியமான கட்டத்தை ஈரானியத் தரப்பு எட்டியுள்ளது.
ஈரானிய சட்ட நிபுணர்கள் மற்றும் இராஜதந்திரிகள் இணைந்து தயாரிக்கும் இந்த ஆவணங்களில், ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு, போர்நிறுத்த நிபந்தனைகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான இணக்கப்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சட்ட வரைபுகள் அமெரிக்கத் தூதுக்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமாக உருமாறவுள்ளது.




