Welcome to Jettamil

நவீன காலத்து ஹிட்லர் நெதன்யாகு ! – துருக்கி அதிரடி கண்டனம்

Share

நவீன காலத்து ஹிட்லர் நெதன்யாகு ! – துருக்கி அதிரடி கண்டனம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முயற்சிப்பதாகத் துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நெதன்யாகுவை “நவீன கால ஹிட்லர்” என வர்ணித்துள்ள துருக்கி அரசு, அமைதி முயற்சிகளுக்கு அவர் முட்டுக்கட்டை போடுவதாகச் சாடியுள்ளது. இஸ்ரேலிய பிரதமரின் இத்தகைய போக்கினால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு இரத்தக் களரி ஏற்பட வாய்ப்புள்ளதாகத் துருக்கி எச்சரித்துள்ளது.

முன்னதாக நெதன்யாகு வெளியிட்ட பதிவில், “தனது சொந்தக் குர்து இன குடிமக்களைப் படுகொலை செய்த எர்டோகனைப் போலல்லாமல், இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நெதன்யாகுவின் இந்தக் கருத்துக்குத் துருக்கி தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனது குற்றங்களை மறைக்க மற்ற நாடுகளின் மீது பழிபோடும் இராஜதந்திரமற்ற செயலை நெதன்யாகு மேற்கொள்வதாகத் துருக்கி வெளியுறவுத் துறை குற்றம் சுமத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை