Welcome to Jettamil

லண்டனில் 523 போராட்டக்காரர்கள் கைது! பலஸ்தீன ஆதரவு அமைப்பின் மீதான தடை விவகாரத்தில் பரபரப்பு!

Share

லண்டனில் 523 போராட்டக்காரர்கள் கைது! பலஸ்தீன ஆதரவு அமைப்பின் மீதான தடை விவகாரத்தில் பரபரப்பு!

லண்டனின் வரலாற்றுப் புகழ்பெற்ற டிராஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square), பலஸ்தீன ஆதரவு அமைப்புக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்ட 523 பேரை லண்டன் மாநகரப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

18 வயது முதல் 87 வயது வரையிலான பல்வேறு தரப்பினர் இந்தக் கைது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த அமைப்பின் பதாகைகளை ஏந்தியிருந்ததற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Palestine Action அமைப்பைத் பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அரசின் முடிவை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்த போதிலும், அரசாங்கம் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.

இந்தச் சட்டச் சிக்கல்களுக்கு மத்தியில், பொலிஸார் மீண்டும் கைது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

“அரசாங்கம் சட்ட வாதங்களை மாற்றிக்கொள்ளலாம், ஆனால் எமது அறப்போராட்டம் மாறாது” எனப் போராட்டக்காரர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இதுவரை சுமார் 3,000 பேர் இவ்வாறான போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை