Welcome to Jettamil

முறிகண்டியில் தொடரூந்து விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

Share

முறிகண்டியில் தொடரூந்து விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

இன்று பிற்பகல் 2.15 மணியளவில் அக்கராயன் நோக்கி பயணித்த Car மீது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடரூந்து மோதி விபத்துக்குள்ளானது.

முறிகண்டி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற தொடரூந்துக் கடவையிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கடவையிலுள்ள எச்சரிக்கை ஒலி மற்றும் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்து காணப்பட்டதே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

காரில் பயணித்த ஒரு பெண்குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடரூந்து வரும் சத்தத்தை உணர்ந்து மகிழூந்தை பின்னோக்கி இயக்க ஓட்டுநர் முயன்ற போதிலும், அதற்குள் தொடரூந்து மோதியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை