சஜித் ஒரு நவீன கால விகடகவி : அவர் மக்கள் முன்னிலையில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாக மாறியுள்ளார் – நிருக்ஷ குமார
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஒரு தலைவராக ஏற்றுக்கொண்டு பலமான எதிர்க்கட்சியை உருவாக்க முடியாது என ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச இன்று மக்கள் முன்னிலையில் ஒரு நவீன கால விகடகவியாக நகைச்சுவை கதாபாத்திரமாக மாறிவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
பொறுப்புகளை ஏற்கத் துணிச்சல் இல்லாத ஒருவரால் நாட்டை வழிநடத்த முடியாது என்றும், பிரதமராகப் பதவியேற்க வருமாறு 70 தடவைகள் அழைப்பு விடுத்தும் அவர் ஓடிவிட்டதாகவும் நிருக்ஷ குமார சாடியுள்ளார்.
Source : Virakesari




