Welcome to Jettamil

இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை வழங்க அழுத்தம் கொடுப்பேன்..! விஜய் வாக்குறுதி

Share

இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை வழங்க அழுத்தம் கொடுப்பேன்..! விஜய் வாக்குறுதி

தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23-ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று சென்னையில் வெளியிட்டார்.

அதில், இந்தியாவில் நீண்டகாலமாக வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை (Citizenship) வழங்க மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பாடுபடுவேன் என விஜய் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்களின் நலன் குறித்துப் பேசிய அவர், கச்சத்தீவுப் பகுதியைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தமிழக மீனவர்கள் எவ்வித அச்சமுமின்றித் தங்களது பாரம்பாரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை