Welcome to Jettamil

ரசிகர்களின் அன்பைப் பார்த்தால் அழுகையே வந்துவிடும்! – நெகிழ்ச்சியில் நடிகை தமன்னா

Share

ரசிகர்களின் அன்பைப் பார்த்தால் அழுகையே வந்துவிடும்! – நெகிழ்ச்சியில் நடிகை தமன்னா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழும் தமன்னா, தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘புருஷன்’ படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரசிகர்கள் தான் ஒரு பிரபலத்தின் மிகப்பெரிய சொத்து எனத் தெரிவித்துள்ளார்.

“தன்னை ஒருமுறை நேரில் பார்த்த உற்சாகத்தில் பல ரசிகர்கள் கதறி அழுவதையும், சிலர் தனது உருவத்தையே உடலில் பச்சை குத்திக் கொள்வதையும் பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது” எனத் தமன்னா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களின் இத்தகைய அன்பைப் பார்க்கும்போது தனக்கும் அழுகை வந்துவிடுவதாகத் தெரிவித்த தமன்னா, இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருப்பதை தனது பாக்கியமாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.

சினிமாவைத் தாண்டி தற்போது சொந்தமாக நகை விற்பனையகம் தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபராகவும் தமன்னா வலம் வருகிறார்.

தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் தமன்னாவின் இந்தக் கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை