விஜய் – சங்கீதா விவகாரத்தில் அதிரடி திருப்பம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பரஸ்பரம் பிரிவது தொடர்பாக, இருதரப்பு வழக்கறிஞர்களும் சென்னையில் நேற்று ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதற்கு விஜய் தரப்பு முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்பின் போது நிதி செட்டில்மெண்ட் தொடர்பாகப் பல விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தனது பிள்ளைகள் மற்றும் தனக்காக மொத்தம் 250 கோடி ரூபாய் செட்டில்மெண்ட் வழங்க வேண்டும் எனச் சங்கீதா தரப்பு கோரியதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலாக, மனைவிக்கு மட்டும் 35 கோடி ரூபாய் வழங்க விஜய் சம்மதித்துள்ளதாகவும், பிள்ளைகளைப் பொறுப்பேற்று வளர்க்க அவர் முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையைச் சேர்ந்த ஜோசியர் ஒருவரின் முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுவது அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




