இலங்கையில் அநுரவை போன்று தமிழகத்தில் வரலாறு படைக்கப்போகும் விஜய்..?
இலங்கையில் நீண்டகாலமாக அதிகாரத்தில் இருந்த பாரம்பரிய அரசியல் குடும்பங்களை வீழ்த்தி, ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த அநுர குமார திசாநாயக்க எப்படிச் சாதித்தாரோ, அதேபோன்றதொரு சூழலைத் தமிழகத்தில் விஜய் உருவாக்கி வருகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டுள்ள விஜய், தமிழகத்தின் பிரதான திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்துகிறார்.
அநுரவின் வெற்றிக்குக் களம் அமைத்துக் கொடுத்தது இளைஞர்களின் ஆதரவு. அதே பாணியில், விஜய்யும் தனது இளைஞர்களை மையமாக வைத்தே தனது தேர்தல் அறிக்கையை வடிவமைத்துள்ளார்.
ஊழலற்ற நிர்வாகம் மற்றும் அடிப்படை மாற்றத்தை விரும்பும் மக்கள், இலங்கையில் அநுரவை அங்கீகரித்தது போல், தமிழகத்தில் விஜய்க்கும் ஒரு வாய்ப்பு வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




