ஈரானியக் கப்பலைக் கைப்பற்றிய புகைப்படங்களை வெளியிட்டது அமெரிக்கா! அரபிக்கடலில் துப்பாக்கிச் சூடு நடத்தித் தாக்குதல்
அரபிக்கடலில் பயணித்த டூஸ்கா (M/V Touska) என்ற ஈரானியக் கப்பலை, அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகமான சென்கொம் (CENTCOM) படைகள் வழிமறித்துக் கைப்பற்றியுள்ளன.
அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை மீற முயன்றதாகக் கூறி, குறித்த பெரிய சரக்குக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அது முடக்கப்பட்டது.
இதன்போது அமெரிக்க மரைன் வீரர்கள் ஹெலிகொப்டர்கள் மற்றும் அதிவேகப் படகுகள் மூலம் கப்பலில் ஏறி அதனைக் கைப்பற்றும் அதிரடிக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளது.
தற்போது அமெரிக்கக் கடற்படையின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள அக்கப்பலில், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் அல்லது பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கொள்கலன்களைத் திறந்து தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.
U.S. forces patrol the Arabian Sea near M/V Touska, April 20, as the Iranian-flagged vessel's container cargo is searched after U.S. Marines boarded and seized the ship when it attempted to violate the U.S. naval blockade. pic.twitter.com/Czs127lK6p
— U.S. Central Command (@CENTCOM) April 20, 2026





