Welcome to Jettamil

நான் அரசியலில் நடிக்கவில்லை! – மத்திய அமைச்சருக்குத் த.வெ.க தலைவர் விஜய் அனல் பறக்கும் பதிலடி!

Share

நான் அரசியலில் நடிக்கவில்லை! – மத்திய அமைச்சருக்குத் த.வெ.க தலைவர் விஜய் அனல் பறக்கும் பதிலடி!

சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், தன்னை ‘நடிகர்’ என்று விமர்சித்த மத்திய அமைச்சருக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார்.

“ஆமாம், நான் நடிகன்தான்; அதை அவர் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போலச் சொல்கிறார். ஆனால், நான் அரசியலுக்கு வந்து நடிக்கவில்லை.

நடிப்பதற்கான அரசியலுக்கு நான் வரவில்லை என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். விஜய்யின் இந்தப் பேச்சு அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பாஜக மற்றும் திமுக-வைச் சாடிய அவர், “அரசியலில் இருந்து கொண்டு நீங்கள் நாடகம் மேல் நாடகம் போடுகிறீர்களே, உங்களை நாடக நடிகர்கள் என்று சொல்லலாமா?

மத்திய அரசின் அதிகாரத்தை வைத்துக் கொண்டு திமுக-வுடன் ஒரு நாடகம், மற்றவர்களுடன் ஒரு நாடகம் என நீங்கள் ஆடும் ஆட்டம் ஆபத்தானது.

உங்களை எல்லாம் ‘நாடக கம்பெனி’ என்று சொல்லலாமா? என வினவினார். எதிர்வரும் தேர்தலில் மக்கள் இத்தகைய நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை