ஆளே மாறிய சிம்பு! உடல் எடையைக் குறைக்க செய்த மேஜிக் – வைரலாகும் சிம்புவின் ரகசியங்கள்!
சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சிம்பு, பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார்.
ஆனால், கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்து பலருக்கும் முன்னுதாரணமாக மாறினார்.
தற்போது அவர் நடிப்பில் ‘அரசன்’ திரைப்படம் உருவாகி வரும் நிலையில், தனது ஃபிட்னஸ் குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தனது உடலுக்குப் பொருந்தாத உணவுகளைத் தவிர்த்து, டயட்டில் அவர் கொண்டு வந்துள்ள மாற்றமே இந்த மாற்றத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சிம்பு, “அசைவம் சாப்பிட்ட பிறகு நான் மிகவும் சோர்வாக உணர்ந்ததால், தற்போது முழுமையாகச் சைவ உணவிற்கு மாறிவிட்டேன்.
இது உடல் லேசாக இருக்க உதவுகிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “எனக்குச் சோறு சாப்பிடப் பிடிக்கும், ஆனால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முதலில் காய்கறிகளைச் சாப்பிட்டுவிட்டு, அதன் பின்னரே சோறு சாப்பிடுகிறேன்” எனத் தனது டயட் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.





