Welcome to Jettamil

ஹோர்முஸ் நீரிணையில் படகுகளை சுட்டு வீழ்த்த அதிரடி உத்தரவு

Share

ஹோர்முஸ் நீரிணையில் படகுகளை சுட்டு வீழ்த்த அதிரடி உத்தரவு

ஹோர்முஸ் நீரிணையில், கடல் மார்க்கமாகக் கண்ணிவெடிகளைப் (Mines) பதிக்க முயற்சிக்கும் எந்தவொரு படகையும் உடனடியாகச் சுட்டு வீழ்த்தி அழிக்குமாறு அமெரிக்கக் கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், அமெரிக்கக் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் கண்ணிவெடிகளை வைக்கும் சிறிய படகுகள் தென்பட்டாலும், எவ்விதத் தயக்கமுமின்றித் தாக்குதல் நடத்த முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“சர்வதேச நீர்ப்பரப்பில் அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்குப் பதிலடி கொடுப்பதில் அமெரிக்கா பின்வாங்காது” எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், ஏற்கனவே எதிர்த்தரப்பின் சுமார் 159 கடற்படைக் கப்பல்கள் கடல் மட்டத்திற்கு அடியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு அதிரடித் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை