யாருக்கு ஓட்டு என குறியீடு மூலம் சொன்ன நடிகை திரிஷா!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முன்னணி திரை நட்சத்திரங்களின் சமூக வலைதளப் பதிவுகளை நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாக்களித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், அவர் விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘கில்லி’யில் வரும் “அர்ஜுனர் வில்லு” பாடலையும், அந்தப் பாடலின் அடையாளமான விசில் சத்தத்தையும் பின்னணியில் சேர்த்துள்ளார்.
நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் முதல்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நிலையில், த்ரிஷாவின் இந்தப் பதிவு அவர் விஜய்க்குத்தான் வாக்களித்தார் என்பதை உறுதி செய்வதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.




