Welcome to Jettamil

உலகையே உலுக்கும் ஈரான் – அமெரிக்க போர் பதற்றம்! பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள உலகத் தலைவர்கள்

Share

உலகையே உலுக்கும் ஈரான் – அமெரிக்க போர் பதற்றம்! பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள உலகத் தலைவர்கள்

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்கும் நோக்கில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தான் இணக்கப்பாட்டு மத்தியஸ்தராகச் செயல்படும் இவ்வேளையில், ஈரானின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அப்பாஸ் அராக்சி அங்கு பகிர்ந்து கொண்டதாகத் தெரிகிறது.

முந்தைய போர் நிறுத்தம் கடந்த 23-ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அதனை காலவரையறையின்றி நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள பின்னணியில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதாரப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, “காலம் கடந்து கொண்டிருக்கிறது, ஈரான் விரைந்து முடிவெடுக்க வேண்டும்” என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மேலதிக பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் விரைந்துள்ளனர்.

“ஈரானுடன் நேரடிச் சந்திப்பு எதுவும் கிடையாது, எமது கருத்துக்கள் பாகிஸ்தான் ஊடாகவே தெரிவிக்கப்படும்” என ஈரானிய அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை