மதுரையில் நாளை பிரம்மாண்டமாக நடக்கிறது சூர்யாவின் ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘கருப்பு’.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஏப்ரல் 26) மதுரையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
சூர்யாவுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு த்ரிஷா நடித்துள்ள நிலையில், ஸ்வாசிகா, யோகிபாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
படத்திற்கு வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘ராத்து ராசன்’ உள்ளிட்ட மூன்று பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ள நிலையில், நாளை முழு ஆல்பமும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகி சமூக வலைத்தளங்களை அதிரவைத்த நிலையில், தற்போது படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் வைரலாகி வருகின்றது.




