ஒன்று வெடித்தால் நான்கு வெடிக்கும் – ட்ரம்பின் மிரட்டலுக்குப் பதிலடி கொடுத்த ஈரான்!
Fox News செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வராவிட்டால் அந்நாட்டின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் சிதைக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
“ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்தால், அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது; இது மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தும்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரான் தலைமை பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்பின் இந்த எச்சரிக்கைக்கு ஈரானிய எரிசக்தி மேம்படுத்தல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் சகப் எஸ்பஹானி (Ismail Sakhab Esfahani) அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.
“எங்கள் உள்கட்டமைப்பிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் உள்கட்டமைப்புகள் மீது நான்கு மடங்கு சேதத்தை ஏற்படுத்துவோம்” என அவர் கூறியுள்ளார்.
“எங்கள் கணிதம் வேறு: 1 எண்ணெய் கிணறு = 4 எண்ணெய் கிணறுகள்” என அவர் விடுத்துள்ள எச்சரிக்கை, வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.




