எலான் மஸ்க்கின் Grok AI அளித்த பதிலால் மீண்டும் பரபரப்பு! மோடிக்கு ஆதரவாகப் பேசும் Grok
எலான் மஸ்க்கின் எக்ஸ் (X) தளத்தில் இயங்கும் க்ராக் AI-யிடம், “நீங்கள் ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, அது நரேந்திர மோடியின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் இந்தியாவின் உலகளாவிய மதிப்பு உயர்வு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே தான் இந்தத் தேர்வைச் செய்வதாக அது குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இதே க்ராக் AI கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலை அளித்திருந்தது.
அப்போது ராகுல் காந்தியை “மிகவும் நேர்மையானவர்” என்றும், “முறையான கல்வி பெற்றவர்” என்றும் புகழ்ந்ததுடன், பிரதமர் மோடியின் நேர்காணல்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை (Scripted) என விமர்சித்திருந்தது.
அப்போது எழுந்த அரசு விசாரணைகள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, இப்போது மோடிக்கு ஆதரவாக அது பதில் அளித்து வருவது, AI அமைப்புகளின் நடுநிலைமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கு எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சிரிக்கும் எமோஜி’யை மட்டும் பதிவிட்டு மௌனமாகப் பதிலளித்துள்ளார்.





