Welcome to Jettamil

பசி கொடுமையால் உணவு தேடி ஹோட்டலுக்குள் புகுந்த ராட்சத முதலை! : சமையலறைக்குள் புகுந்து உணவு தேடியதால் பரபரப்பு

Share

பசி கொடுமையால் உணவு தேடி ஹோட்டலுக்குள் புகுந்த ராட்சத முதலை! : சமையலறைக்குள் புகுந்து உணவு தேடியதால் பரபரப்பு

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் புகழ்பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு அருகே அமைந்துள்ள ‘ஏ-ஜாம்பேசி ரிவர் லாட்ஜ்’ ஹோட்டலுக்குள் 13 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று திடீரென நுழைந்தது.

ஹோட்டலில் உள்ள அமுலோங்கா உணவகத்தின் பஃபே கவுண்டரை நோக்கிச் சென்ற அந்த முதலை, அங்கிருந்து சமையலறைக்குள் நுழைய முயன்றது.

உணவகம் மூடப்பட்டிருந்ததால், பசியோடு இருந்த அந்த முதலை சமையலறைப் பகுதியைச் சுற்றி வந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளது.

ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த ஜிம்பாப்வே பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை அதிகாரிகள், சுமார் 13 அடி நீளமுள்ள அந்த முதலையைப் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தி மீண்டும் ஜாம்பேசி ஆற்றில் விடுவித்தனர்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், அந்தப் பகுதி முதலைகளின் இயற்கை வாழ்விடமாக இருப்பதால் இத்தகைய நிகழ்வுகள் அங்கு சாதாரணமானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை