ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான மாணவன் பலி! விசேட தேவையுடைய குடும்பத்தின் ஒரே நம்பிக்கையும் சிதைந்தது
தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவன் ஒருவர் நேற்று புதன்கிழமை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலையில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்த இவரைத் தவிர, அந்த வீட்டில் உள்ள அனைவரும் விசேட தேவையுடையவர்கள் என்ற மனதை உருக்கும் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
அந்தக் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாக இருந்த இந்த மாணவன், அண்மைக்காலமாகத் தொலைபேசி கேமிற்கு அடிமையான நிலையில் காணப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை அவர் உயிர்மாய்த்த நிலையில் மீட்கப்பட்ட போது, வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரண விசாரணை அதிகாரி சடலத்தை ஆய்வு செய்துள்ள நிலையில், தொலைபேசி விளையாட்டுகளால் ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்புகளே இந்தத் துயரத்திற்குப் பிரதான காரணமாகக் கருதப்படுகிறது.
வறுமை மற்றும் இயலாமையின் பிடியில் இருந்த ஒரு குடும்பத்தின் ஒரே தூணாக விளங்கிய மாணவனின் இந்த முடிவு, அப்பகுதி மக்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.




