2026 அமைதிக்கான நோபல் பரிசு – ட்ரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்த பாகிஸ்தான்
2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 287 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோர்வே நோபல் குழாம் அறிவித்துள்ளது. இதில் 208 தனிநபர்களும் 79 அமைப்புகளும் அடங்குவர்.
இதில் மிகவும் ஆச்சரியமான விடயமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களுடன் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா மற்றும் போப் லியோ ஆகியோரது பெயர்களும் பந்தயக் களத்தில் முன்னிலையில் உள்ளன.
ஒருபுறம் புதிய பரிந்துரைகள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் 2023-ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு வென்ற ஈரானின் நர்கீஸ் முகமதி சிறையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க ஈரான் அரசு அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நோபல் குழாம் சர்வதேச அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான வெற்றியாளர் யார் என்பது ஒக்டோபர் 9-ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.





