Welcome to Jettamil

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பதவி நீக்கமா? ஜனாதிபதிக்கும் இராணுவத்திற்கும் இடையே வெடித்த அதிகார யுத்தம்

Share

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பதவி நீக்கமா? ஜனாதிபதிக்கும் இராணுவத்திற்கும் இடையே வெடித்த அதிகார யுத்தம்

அமெரிக்காவுடனான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ள நிலையில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைப் பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் அதிகாரத்தைப் புறக்கணித்துவிட்டு, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உத்தரவுகளுக்கு அராக்சி முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, அவர் அமைச்சராகச் செயல்படாமல் இராணுவத் தளபதி அஹ்மத் வாஹிதியின் உதவியாளராகவே செயல்படுவதாக ஜனாதிபதி தரப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஈரானியத் தலைமைக்குள் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவே, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

போரினால் சிதைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி முயலும் வேளையில், இராணுவத் தரப்பு அதற்கு முட்டுக்கட்டை போடுவதாகத் தெரிகிறது.

இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஈரான் தூதுக்குழுவிற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாதது அமெரிக்காவை எரிச்சலடையச் செய்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து ஈரான் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை, மேலும் இந்தக் கூற்றுகளுக்கு ஈரானிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.

லண்டனை தளமாக கொண்ட கொண்டு இயங்கும் ஒரு பாரசீக மொழி செய்தி ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை